நான் வாழ்வதும் உன்னாலே! நீ காட்டிடும் அன்பாலே!!

என் கண்கள் உறங்காது!
உன் பூமுகம் காணாது!!
நான் வாழ்வதும் உன்னாலே!
நீ காட்டிடும் அன்பாலே!!


என் ஆயிரம் ஜென்மங்களும்,
உன் அன்பினை நான் கேட்பேன்.


நான் பார்க்கும் இடமெல்லாம்,
கண்ணில் நீயின்றி வேறில்லை!
என் வாழ்க்கையின் ஆதாரம்
எந்த நாளிலும் நீயாகும் .


நீ பாயும் நதியானாய்!
உன்னைத் தாங்கும் கரையானேன்!!
என் வாழ்க்கையில் நீ பாதி!
உன் வாழ்க்கையில் நான் பாதி!!

இந்த வரிகள் அனைத்தும் 'ஓசை' என்ற படத்தில் இடம்பெற்ற 'ஒரு பாடல் நான் கேட்டேன்' என்ற பாடல் மூலம் நான் கேட்டேன். நான் திரும்ப, திரும்ப ஒலிக்க செய்து ரசித்து, ருசித்து மகிழும் பாடல்களில், இந்த பாடல் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ஏனென்றால் இப்பாடலின் வரிகள் ரொம்பவே பிடிக்கிறது. அதுமட்டுமல்லாமல், என்னுடைய முதல் பத்து வருட, சிறுபருவப் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்திய, தமிழக எல்லைகளின் ஓரமாய் ஒதுங்கியே கிடந்த எங்கள் ஊரில் அதுவும் எங்கள் வீட்டில் இந்த பாடலை கொண்டு சேர்த்தது என்னுடைய வயதாகாத தாத்தா ஒருவர்தான். 'ஓசை' என்று பெயர் பொறிக்கப்பட்ட ஒலிநாடா ஒன்றில் கதாநாயகன், நாயகி, அவர்கள் குழந்தையென்று மூவரின் நிழல்களும் நிழற்படங்களாக இடம்பெற்றிருந்தன. இளஞ்சிவப்பு சூரியனின் கதிர்கள், சூரியமறைவு நிகழும் போது வானில் வர்ணஜாலம் காட்டி, பரவும் காட்சி அவர்களை நிழல்களாக காட்டுவதற்க்கென்றே அவர்கள் பின்புறமாய் வரையப்பட்டிருந்தது. மறந்திட மன்றாடினாலும் மனது சில நிகழ்வுகளை மறந்திட மறுத்திடுது அதுவும் சின்னஞ்சிறு வயதின் நியாபகங்கள் ஈரமணலில் பதிந்த பாதங்கள் போலவே பதிவுகளாக மனதில் பதிந்துள்ளன.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணிஜெயராம் தங்கள் குரல்களால் இனிமை சேர்க்க, சந்திரபோஸ் இந்த பாடலுக்கு வடிவமும், இசை வளமும் சேர்த்திருக்கிறார் . என்னை பித்தனாக்கிய இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் புலமைப்பித்தன்.

அன்பின் பரிமாற்றத்தை அழகுபட உரைக்கும் இப்பாடலின் முதன்மை வரிகள் இவ்வாறு அமைகிறது.
ஒரு பாடல் நான் கேட்டேன்!
உன் பாசம் அதில் பார்த்தேன்!!
வாழ்க்கையென்று எதுவும் இல்லை;
உந்தன் எந்தன் கதையாகும்!

அன்பு, பாசம், நேசம், காதல் - இவற்றைத் தவிர சிறந்த செல்வம் உலகில் என்னதான் இருக்க முடியும்?. இவை இல்லாமல் போகும் இடம்தானே இடர்களின் பிறப்பிடமாக மாறிப்போகிறது.

நான் வாழ்வதும் உன்னாலே!
நீ காட்டிடும் அன்பாலே!!

பொன்னான வரிகள்... 'நான் வாழ்வது நீ காட்டிடும் அன்பால்' என்பது எவ்வளவு உண்மையோ, அதுபோல் நீ வாழ்வதும் நான் காட்டும் அன்பால் தானே சாத்தியம். ஆகவே, "அன்பைப் பெறுவதில் நான் காட்டும் ஆர்வத்தை கண்டிப்பாக பலமடங்கு அளிப்பதிலும் காட்டுவேன்" என்ற ஒரேயொரு வாக்கியத்தில் அமைத்துப் பாருங்கள் உங்கள் வாழ்க்கையை. உலக மாயைகளிலிருந்து எளிதாக விடுபட்டு அன்பின் பிடியில் சிக்கிக்கொள்ள முடியும்.
சிக்கி சீரடையுங்கள்.
அன்பின்றி ஓரணவும் அசையாதாமே!!!.

என்ன அழகு எத்தனை அழகு...

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில் சுக்சம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன்

(என்ன அழகு ...)

அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன்
கிடையாதேன்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
நான்கு ஆண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன்
காற்றும் நிலவும் கடலும் அடி தீ கூட தித்திதேன்
மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசிதேன்
என்னை நான் கில்லி இது நிஜம் தான சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் தொடுமே

(என்ன அழகு ....)

நான் கொண்ட ஆசை எல்லாம் நான்காண்டு ஆசைதான்
உறங்கும் பொழுது ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசைதான்
நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாசு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை ஒழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே